ருசியான கிராமத்து ஸ்டைல் பனங்கிழங்கு உப்புமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!

Summary: இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள். இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர். ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. அதனால் ரவை உப்புமாவிற்கு மாறுதலாக பனங்கிழங்கு உப்புமா செய்தால் உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 100 கிராம் பனங்கிழங்கு மாவு
  • 1/2 சிட்டிகை பெருங்காயம்
  • 4 சின்ன
  • 2 வர மிளகாய்
  • உப்பு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. பனங்கிழங்கின் தோலை உரித்து அதை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின்னர் பனங்கிழங்கை குக்கரில் போட்டு சிறிதளவு உப்பு சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு 10 விசில் விட்டு வேக வைக்கவும்.
  3. வேகவைத்த கிழங்கை ஒரு நாள் முழுவதும் நிழலில் காயவிடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  4. அரைத்த பொடியை சலித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளவும். இதை பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம்.
  5. 100 கிராம் பனங்கிழங்கு மாவை எடுத்துக்கொண்டு அதை சலித்து வைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  7. பின்னர் 100 கிராம் பனங்கிழங்கு மாவை போட்டு சிறிதளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் வேக வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான பனங்கிழங்கு உப்புமா ரெடி.