மதிய உணவுக்கு ஏற்ற ருசியான பரங்கிக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க!

Summary: சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட பரங்கிக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க பரங்கிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த பரங்கிக்காய் பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 100 கிராம் பரங்கிக்காய்
  • 1 வெங்காயம்
  • இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • தேங்காய் துருவல்
  • உப்பு
  • எண்ணெய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், பரங்கிக்காய், ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். அடுத்து கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. பின்னர் வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய், பரங்கிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அத்துடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  5. பரங்கிக்காய் வெந்ததும் கடைசியாக தேங்காய் துருவல், மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.