ருசியான சாம்பார் ரெடி செய்ய மணமணக்கும் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!

Summary: பொதுவாக ஹோட்டல்களில் வைக்கப்படும் சாம்பார் மிகவும் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஆனால் வீட்டில் செய்யப்படும் படும் சாம்பார் அந்த சுவையில் பலருக்கும் வராது. இனி அத்தகவலை வேண்டாம் நம் வீட்டிலேயே சாம்பார் பொடி அரைப்பது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • கட்டி பெருங்காயம்
  • 1 ஸ்பூன் அரிசி
  • 4 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய்
  • 20 வர மிளகாய்
  • கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றாமல் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவொன்றாக பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்பொழுது சாம்பார் பொடி தயார்.