இரவு உணவுக்கு ராகி மாவு சப்பாத்தி இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!!

Summary: எப்பொழுதும் காலை உணவாக இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் இது போன்று ராகி சப்பாத்தி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் ராகி உடலுக்கு மிகவும் நல்லது.இந்த சப்பாத்தி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் ராகி மாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  2. தண்ணீர் கொதித்தவுடன் ராகி மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பிறகு கை பொறுக்கும் அளவிற்கு சூடு ஆறியதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும்.
  4. பிறகு சிறு சிறு உருடைகளாக பிடித்து சப்பாத்தி மாவு போல் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.