ருசியான பீட்ரூட் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்ங! அற்புதமான ஒரு ஸ்நாக்ஸ்!!!

Summary: மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதேனும் சாப்பிட கேட்கிறார்களா? அவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் வரை செய்வது மிகவும் சுலபம். மேலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பீட்ரூட் துருவல் மற்றும் ஊறவைத்த பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரபலமான தமிழ் உணவு வகைகளில் இருந்து ஒரு சின்னமான ஆழமான வறுத்த சிற்றுண்டி.

Ingredients:

  • 50 கிராம் கடலைப்பருப்பு
  • 1 துருவிய பீட்ரூட்
  • 1 நறுக்கிய
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் குழம்பு கடலை பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. ஊற வைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  4. பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவை சிறு சிறு உருளையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான மொறுமொறுப்பான பீட்ரூட் வடை ரெடி.