மதிய உணவுக்கு ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி சுட சுட செய்து பாருங்கள்!

Summary: இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் பட்டர் பீன்ஸ் சாதம். பட்டர் பீன்ஸ்ல் பல சத்துக்கள் உள்ளன. அப்படிப்பட்ட பட்டர் பீன்ஸ் குழந்தைகளுக்கு தாளித்து கொடுத்தால், அவர்கள் விரும்பி அதை உண்ண மாட்டார்கள். அதற்கு பதிலாக பட்டர் பீன்ஸ் சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பட்டர் பீன்ஸ் சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 2 கப் பட்டர் பீன்ஸ்
  • 2  பச்சை மிளகாய்
  • 1 Tsp மிளகாய் தூள்
  • 1/4 Tsp மஞ்சள் தூள்
  • 1 Tsp கரம் மசாலா
  • 1/2 Tsp சீரகத்தூள்
  • 1/2 Tsp தனியா தூள்
  • 1/4 கப் எண்ணெய்
  • கருவேப்பிலை
  • 1/4 Tsp கடுகு
  • 1 Tsp கடலை பருப்பு
  • 1 Tsp புளி விழுது
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் அரிசியை சுத்தப்படுத்தி பின் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து சோறை உதிரியான பதத்தில் வடித்து ஆறவிடவும்.
  2. பின் பட்டர் பீன்ஸை நன்கு வேகவைத்து லேசாக மசித்து கொள்ளவும். பின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மறுறும் பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் நன்கு வதயங்கியதும்.
  4. இதனுடன் சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மசாலாத்தூள் போன்ற மசாலா பொருட்களை சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. அதன்பின்னர் நாம் மசித்து விட்ட பட்டர் பீன்ஸ் போட்டு கிளறி விட்டு பின் தேவையான அளவு உப்பு மற்றும் புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  6. பின் வதக்கிய கலவையில் சாதத்தைக் கொட்டி நன்கு கிளறி ஓரிரு நிமிடம் விட்டு இறக்கி குருமா, தயிர் பச்சடி போன்றவற்றுடன் பரிமாறலாம் அற்புதமான சுவையில் இருக்கும்.