ருசியான கீரை கட்லெட் இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெடி!!!

Summary: கீரை யை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு  கீரை கட்லெட் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நிறைய எண்ணெய் கூட ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த கட்லெட்டை தயார் செய்துவிடலாம்.

Ingredients:

  • 1 கப் முளைக்கீரை
  • 1/2 கப் கடலைமாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1 இஞ்சி
  • மல்லித்தழை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கீரையைஉப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து எடுங்கள். (அதிகப்படியான தண்ணீரை வடித்து ரசம் அல்லது சாம்பாரில் சேர்க்கலாம்).
  2. வெங்காயம்,மிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை சேர்த்து வதக்கி அத்துடன், வெந்த கீரையையும் சேர்த்து வதக்குங்கள்.
  3. கடலைமாவுடன்தேவையான தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரையுங்கள். இதனைக் கீரையுடன் சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறுங்கள். நன்கு சுருண்டு வரும்வரை கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடுங்கள்.