டீ, காபியுடன் சாப்பிட ருசியான பரங்கிக்காய் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!

Summary: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, காரசாரமாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் பரங்கிக்காய் உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய பக்கோடா செய்யலாம். இந்த பரங்கிக்காய் பக்கோடா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் பரங்கிக்காய்
  • 1/2 கப் கடலை
  • 1/4 கப் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு நறுக்கிய இஞ்சி
  • 1/2 சிட்டிகை பெருங்காயம் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பரங்கிக்காயை தோல் சீவி காரட் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் துருவிய பரங்கிக்கய், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. அத்துடன் தேவைக்கேற்ப காரம், உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தண்ணி விடாமல் பிசைந்து கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சமாக கிள்ளி போட்டு வேக விடவும்.
  5. நன்கு பொரித்து சிவந்து மொறு மொறு ஆனதும் எடுத்து விடவும். சுவையான பரங்கிகாய் பக்கோடா தயார்.