மாலை நேர ஸ்நாக்ஸாக பச்சை பட்டாணி மோமோஸ் இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!!

Summary: உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன்முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், வெஜ் மோமோஸை முதலில் செய்து பாருங்கள். வெஜ் மோமோஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. வெஜ் மோமோஸில் உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் மைதா
  • 1/2 கப் நறுக்கிய
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1/4 கப் குடைமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, பூண்டு
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மைதா மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக மாவை பிசைந்து வைக்கவும்.
  2. பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கின பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் லேசா வதங்கியதும் அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
  4. அதன்பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கி, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்.
  5. மைதா மாவை சின்ன சின்ன பூரி உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. பின்னர் ஒரு பூரியின் நடுவில் பட்டாணி பூரணம் வைத்து அதை சிறிது சிறிதாக மடிப்பு போல் வைத்து மடித்து தொப்பி வடிவில் செய்து இரண்டு பக்கத்தையும் சேர்த்து ஒட்டி விடவும்.
  7. எல்லாவற்றையும் இதே போல் செய்யவும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவில் செய்துக் கொள்ளலாம்.
  8. அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து செய்து வைத்திருக்கும் மோமோசை ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
  9. சுவையுடன் கூடிய பச்சை பட்டாணி மோமோஸ் தயார். மிக மிக சுவையான மோமோசை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சேர்த்து சுவைக்கவும்.