சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான காளான் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: ரெஸ்டாரண்ட்களில் வாங்கி சாப்பிடும் காளான் கிரேவி சுவை அதிகமாக இருக்கும். ஆனால் விலையும் அதிகமாக இருக்கும். அந்தவகையில் காளான் வைத்து நம்முடைய வீட்டிலேயே ரிச்சாக காளான் குழம்பு எப்படி செய்பது என்றுதான் பார்க்கப்போகிறோம்.உங்கள் குழந்தைகளுக்கு உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், இப்படி எதற்கு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த காளான் குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.

Ingredients:

  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை
  • 3 ஏலக்காய்
  • 1 வெங்காயம்
  • உப்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • 1 தக்காளி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், சீரகம், சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  2. இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  3. பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
  5. வதாகியதும் இரண்டாக நறுக்கிய காளானை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 முதல் 10 நிமிடம் வரை கடாயை மூடி விட்டு வேக விடவும்.
  6. பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும். இப்பொழுது சுவையான காளான் குழம்பு ரெடி.