இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான அப்பள சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!

Summary: இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இந்த பகுதியில் இட்லி தோசைக்கு ஏற்ற அப்பள சட்னி எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 5 அப்பளம்
  • 12 சின்ன
  • 1/2 கப் தேங்காய்
  • 2 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 5 வர மிளகாய்
  • புளி
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் அப்பளத்தை எண்ணையில் பொரித்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வர மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அதன் பிறகு வெங்காயம், பூண்டு இஞ்சியை வறுத்து எடுத்து ஆற விடவும்.
  4. ஒரு மிக்ஸி ஜாரில் அப்பளத்தை தூளாக்கி, அத்துடன் வறுத்து வைத்திருக்கும் வர மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  5. அத்துடன் தேங்காய் துருவல், தேவையான உப்பு சேர்த்து நன்கு தண்ணி விடாமல் அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி விடவும்.
  6. விரும்பினால் கொஞ்சம் எண்ணையில் கடுகு கருவேப்பிலை பெரும்காயம் சேர்த்து தாளித்துக்கவும்.
  7. சுவையான அப்பள தேங்காய் சட்னி தயார். தோசை, சப்பாத்தி, இட்லி, மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.