ஹோட்டல் ஸ்டைலில் தித்திக்கும் சுவையில் குலாப் ஜாமூன் இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Summary: நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு முறை இந்த ஜாமூனை சுவைத்தாள் போதும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த அழகான அடர் கருப்பு வண்ண ஜாமூன்கள், சாதாரண மற்ற ஜாமூன்களை விட இனிப்பானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குலாப் ஜாமூன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 cup பால்
  • 1 cup பனீர்
  • 1 tsp பேக்கிங் பவுடர்
  • 5 tbsp மைதா மாவு
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • 3 tbsp சர்க்கரை
  • 1 tsp நெய்
  • நெய்
  • உப்பு
  • 5 cup சர்க்கரை
  • 3 cup தண்ணீர்
  • 1 tsp ரோஸ் எசன்ஸ்
  • 1 tsp குங்குமப்பூ
  • 1 tsp ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய கண் கரண்டி
  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. சர்க்கரை பாகைத் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, சர்க்கரை பாகைத்ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவை கலந்து கொள் வேண்டும்.
  2. சிரப் தன்மையைப் பெறும் வரை சூடாக்கவும்.பொதுவாக அந்த சிரப் தன்மைக்கு சுமார் 8 – 10 நிமிடங்கள் ஆகும்.ரோஸ் வாட்டர் சேர்த்து தனியாக வைக்கவும்.
  3. குலாப் ஜாமூன் செய்ய முதலில் ஒரு அகலமான கிண்ணத்தில், நொறுக் கப்பட்ட கோயா, ஆல் பர்ப்பஸ் மாவு, பனீர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்க வேண்டும்.
  4. பின்னர் அதை மெதுவாக கலக்க வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாக செய்து, மாவை நன்றாக பிசைய வேண்டும்.
  5. அதன் பிறகு நெய்யைப் பயன்படுத்தி பிசையவும்.சிறுது மாவை எடுத்து, ஏலக்காய் தூள், சர்க்கரை, கலர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.அதில் நறுக்கிய பருப்புகளையும் சேர்க்கலாம்.
  6. அதனை பிறகு சிறிய பந்துகளை உருவாக்க வேண்டும் .நிறம் மற்றும் வெள்ளை மாவை சம பாகங்களாக பிரிக்க வேண்டும்.
  7. வெள்ளை மாவை எடுத்து, பரப்பி, பின்னர் அதில் கலர் மாவை அடைத்து மூடவும்.ஒரு வட்ட வடிவத்தை உருவாக்க வேண்டும்
  8. பிறகு முழு மாவிற்கும் அதே செயல்முறையை மீண்டும் செய்யவும். ஜாமூன்கள் தயாரானதும், எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.
  9. குறைந்த தீயில், ஜாமூனை 5-6 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஜாமூனை மீண்டும் 3- 4 நிமிடங்கள் குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.
  10. அவைகள் வெளியே கருப்பு நிறத்தைப் பெரும். ஆனால் அதிக வெப்பத்தில் வைக்க வேண்டாம். இந்த ஜாமூன்களை சூடான சர்க்கரை பாகில் சேர்த்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைத்து பரிமாறவும். சுவையான குலாப் ஜாமூன் ரெடி.