வெயிலுக்கு இதமா ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! குளு குளுனு ருசியாக இருக்கும்!

Summary: நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.எனவே குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது . உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய இந்த ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 2 கப் ஸ்ட்ராபெர்ரி
  • 2 டீஸ்பூன் லெமன் ஜூஸ்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4 கப் பால்
  • 1/2 கப் கன்டென்ஸ்டு மில்க்
  • 2 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1 சிட்டிகை உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு
  2. மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு 3/4 பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும்.
  3. பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
  4. அதைஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு பரிமாறவும்.