ருசியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை இப்படி செய்து பாருங்க! சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
Summary: சிக்கனில் எத்தனையோ வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை இந்த ரெசிபி சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.
Ingredients:
½ கிலோ சிக்கன்
1 பெரிய வெங்காயம்
10 பற்கள் பூண்டு
1 துண்டு இஞ்சி
8 பச்சை மிளகாய்
உப்பு
எண்ணெய்
2 பட்டை
4 கிராம்பு
1 ஸ்பூன் மல்லி
¼ ஸ்பூன் வெந்ததயம்
½ ஸ்பூன் சீரகம்
½ ஸ்பூன் சோம்பு
Steps:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் மிக்சியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பொடி செய்துகொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் சுத்தம் செய்த சிக்கனை போட்டுஅத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின் அதில் அரைத்த பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி பரிமாறலாம்.