டீ, காபியுடன் சாப்பிட ஸ்நாக்ஸாக பாலக் முறுக்கு இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் ருசியே தனி!!

Summary: பொதுவாக முறுக்கு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். பல வகை முறுக்கு இருக்கிது அதில் வெண்ணைய் முறுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. பொதுவாக பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான சுவையான பலகாரம் ஆகும். முறுக்கு நம் பாரம்பரிய பலகாரத்தில் ஒன்று. பலருக்கு பிடித்த ஒரு நொருக்கு தீனி என்றால் அது முறுக்கு தான். பாலக் முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

Ingredients:

  • 1 கப் இடியாப்ப மாவு
  • 1 கைப்பிடி பாலக் கீரை
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் எள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கீரையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. அதனுடன் அரைத்த பாலக் கீரையும் சேர்த்து நன்றாக பிசையவும் தண்ணீர் போதவில்லை என்றால் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  4. பிசைந்த மாவை ஒரு ஸ்டார் அச்சில் போட்டு வட்டமாக சுற்றி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  5. எண்ணையில் சலசலப்பு அடங்கியதும் எடுத்து விடவும். ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்.
  6. இப்போது சூடான சுவையான சத்தான பாலக்கீரை முறுக்கு தயார்.