Summary: நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் உங்கள் குட்டிஸ்களுக்கு இந்த கோதுமை ரவை புட்டிங்கை செய்து கொடுங்கள்.