சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான ராஜ்மா மசாலா இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!

Summary: உங்கள் வீட்டில் ராஜ்மா என்னும் சிவப்பு காராமணி உள்ளதா? அதைக் கொண்டு ஒரு அற்புதமான ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாபி ராஜ்மா மசாலா செய்யுங்கள்.ரெட் கிட்னி பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த பஞ்சாபி ராஜ்மா மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Ingredients:

  • 1 கப் வேகவைத்த சிகப்பு காராமணி
  • 2 நறுக்கிய
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • பட்டை, கிராம்பு, சோம்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் கசூரி மேத்தி
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் வெண்ணை விட்டு சீரகம், பட்டை, சோம்பு, கிராம்பு சேர்த்து பொரிஞ்சதும், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  3. அத்துடன் தக்காளி சேர்த்து நன்கு குழைய வந்த பிறகு வேக வைத்திருக்கும் ராஜ்மா சேர்த்து தேவையான தண்ணி, உப்பு, மாங்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும் கஸ்தூரி மேத்தியை கையில் வைத்து நசுக்கி சேர்த்து, கொத்தமல்லி, 2 பச்சை மிளகாயை கீறி சேர்த்துக்கவும்.
  5. பின் இறக்கும் முன்பாக ஒரு ஸ்பூன் வெண்ணை மற்றும் 1/2 ஸ்பூன் சக்கரை சேர்த்தால் சுவை மிக்க ராஜ்மா மசாலா கறி தயார்.
  6. சத்துக்கள் நிறைந்த ராஜ்மா மசாலாவை சப்பாத்தி, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும்.