பஞ்சாபி சேனைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்க! சப்பாத்தியுடன் சாப்பிட இதன் ருசியே தனி!!

Summary: இன்று மதியம் உங்கள் வீட்டில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். அதுவும் பஞ்சாபி ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இது சாதத்திற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இதை செய்வதும் மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த மசாலாவை முயற்சிக்கலாம்.

Ingredients:

  • 1 கப் சேனை
  • 2 வெங்காய
  • 2 தக்காளி விழுது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பிரிஞ்சி
  • 1/2 டீஸ்பூன் கசூரி மேத்தி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்துக்கவும்.
  2. அத்துடன் வெங்காய விழுது சேர்த்து வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணி விட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  4. அத்துடன் தக்காளி விழுது நன்கு கொதித்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. அத்துடன் சேனை கிழங்கு சேர்த்து வதக்கி விட்டு 1/2 கப் தண்ணி, உப்பு சேர்த்து தட்டு வைத்து மூடி 5 நிமிடம் வேக விடவும்.
  6. கிழங்கு நன்கு வெந்த பிறகு கரம் மசாலா சேர்த்து கையில் வைத்து கஸ்தூரி மேத்தியை நசுக்கி சேர்த்து விட்டு பச்சை கொத்தமல்லியை தூவி அடுப்பை ஆப் செய்து விடவும்.
  7. பஞ்சாபி சூரன் மசாலா தயார். அருமையான நிறம் மற்றும் சுவையுடன் சேனை கிழங்கு மசாலாவை சாதம், மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சுவைக்கவும்.