கிராமத்து ஸ்டைல் ருசியான இறால் பெப்பர் ப்ரை இப்படி செய்து பாருங்களேன்!!

Summary: இந்த இறால் பெப்பர் ப்ரையை நீங்கள் சப்பாத்தி பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு என் எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். இதை நீங்கள் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இறால் கிரேவி ருசியாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் இறால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 tsp தனியா துள்
  • 1 tsp கரம் மசாலா
  • 1 tsp சீரகத்துள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 2 tbsp மிளகு
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகு சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  2. பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, சேர்த்து தாளிக்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பத்திற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின் இஞ்சி பூண்டு பச்சை வாடை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வதங்கியதும்.
  4. பின் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நாம் சேர்த்த மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் சுத்தபடுத்திய இறால் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறாலை பத்து நிமிடங்கள் வரை வேக விடவும்
  5. பின் இறால் நன்கு வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் கொத்துமல்லி தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான இறால் பெப்பர் ப்ரை தயார்.