ருசியான கிராமத்து கேழ்வரகு புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான

Summary: காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு அதனுடன் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவை நம்மளை அப்படியே மறக்கடிக்கும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த புட்டுகள் பல வகையான சிறு தானியங்களை வைத்து செய்யப்படுகின்றது, அந்த வகையில் இன்று நாம் கேழ்வரகு புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் உணவில் கேழ்வரகு சேர்த்து சாப்பிடுவதால் அதில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் நமக்கு உடல் வலிமை அதிகம் தரும். மேலும் கேழ்வரகில் உள்ள சத்துக்களால் ரத்த சோகை நீங்கி நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தத்தின் அளவை அதிகரிக்க வைக்கிறது.

Ingredients:

  • 3 கப் கேழ்வரகு
  • 1 கப் சர்க்கரை
  • ½ tbsp உப்பு
  • ½ மூடி தேங்காய்
  • நெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுளில் நாம் வைத்திருக்கும் கேழ்வரகு மாவை நன்றாக சலித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்
  2. பின்பு இந்த மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை கெட்டியாகவும் தண்ணியாகவும் பிசைந்து விடாமல் சிறிதளவிலேயே தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  3. ஒரு இட்லி பாத்தித்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன் இட்லி தட்டை போட்டு இட்லி துணியை தண்ணீரில் நனைத்து அதன்பின் தண்ணீரில் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளுங்கள்.
  4. பின் இட்லி தட்டின் மேல் துணியை விரித்து நாம் தயார் செய்து உள்ள வைத்துள்ள கேழ்வரகு மாவை துணியின் மேல் பரப்பி விட்டுக் கொள்ளுங்கள். பிறகு இட்லி பாத்திரத்தை மூடிவிட்டு. பின் இந்த நேரத்தில் நீங்கள் வைத்திருக்கும் தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின் புட்டு நன்றாக வெந்து ஆவி வரும் வரை காத்திருந்து ஆவி வந்த பின் புட்டுவை வெளிய எடுத்துக் கொள்ளுங்கள். பின் புட்டு சூடாக இருக்கும் பொழுது இதனுடைய நாம் வைத்திருக்கும் ஒரு கப் சர்க்கரை, தேவையான அளவு நெய் மற்றும் தேங்காயை துருவலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  6. அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு புட்டு தயாராகிவிட்டது. இந்த கேழ்வரகு புட்டுடன் நீங்கள் வாழைப்பழத்தையும் சேர்ந்து சாப்பிட்டால் இதன் சுவை தாறுமாறாக இருக்கும்.