மதிய உணவுக்கு ருசியான அவரக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!

Summary: வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 150 gm அவரகாய்
  • 1/ tsp கடுகு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/ வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tsp உளுத்தம் பருப்பு
  • ½ cup துருவிய தேங்காய்
  • தேவையான அளவு உப்பு
  • 2 tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அவரைக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
  3. பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
  4. நறுக்கிய அவரைக்காயையும் சேர்க்க வேண்டும்.பின்னர் லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிட வேண்டும்.
  5. அவரைக்காய் வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்க வேண்டும்.சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.