மதிய உணவுக்கு ருசியான அப்பள கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: வீட்டில் ரசம் வைக்கும் போது அதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு முடிந்த அளவிற்கு எளிமையான முறையில் ஏதாவது ஒரு கூட்டு இல்லை என்றால் அப்பளம் பொரித்து வைத்து விடுவோம். ஆனால் அந்த அப்பளத்தை சும்மா அப்படியே பொரித்து வைக்காமல் அதையே சற்று வித்தியாசமாக சமைத்து கூட்டாக மாற்றி விடலாம். ஆம் இன்று நாம் அப்பள கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வெகு நாட்களாக தொடர்ந்து வெறும் அம்பளத்தை மட்டும் பொரித்து சாப்பிடும் உங்களுக்கு இந்த அப்பள கூட்டு ஒரு மாறுதலான சுவையில் இருக்கும் அது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 சில் தேங்காய்
  • 4 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • பெருங்காய தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • அரைத்த மசாலா
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • அப்பளம்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பத்து வட்ட அப்பளங்களை எடுத்துக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் கத்திரிக்கோலை கொண்டு வெட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் நறுக்கிய அப்பளத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சில் தேங்காய் நறுக்கி சேர்த்து அதனுடன் நான்கு பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து தண்ணி ஊற்றாமல் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும்.
  4. பின் கடுகு பொரிந்து வந்தவுடன் கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் தாளித்து கொள்ளவும். பின் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  5. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நான் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கூட்டுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. பின் தேங்காய் நன்கு வதங்கியதும் நாம் பொரித்து வைத்திருக்கும் அப்பளத்தை இதனுடன் சேர்த்து அப்பளம் நொறுங்காமல் நன்றாக கிளறி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான அப்பள கூட்டு தயார்.