தள்ளுவண்டி கடை காரசாரமான மூளை முட்டை பொரியல் செய்வது எப்படி ?

Summary: இன்று ஆட்டின் மூளை பகுதியை பற்றிதான் பார்க்க இருக்கிறோம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆட்டின் மூளையை சமைத்து கொடுத்தால் குழந்தைகளின் மூளை சக்தி அதிகரிக்கும் கண்கள் குளிர்ச்சி அடையும். மேலும் நினைவாற்றல் மற்றம் மூளையின் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆண்கள் மூளையை சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் குறைபாடு தீர்ந்து விந்துக்களில் தாதுக்கள் உற்பத்தி ஆகும் இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த மூளையை எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 ஆட்டு மூளை
  • 1 முட்டை
  • 3 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp கடலை பருப்பு
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • உப்பு
  • 1 tbsp மிளகுத் தூள்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வாங்கிய ஆட்டு மூளையின் மேல் உள்ள சிவப்பு நிற பகுதிகளை முற்றிலும் நீக்கிவிட்டு மூளையே மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு கடுகு பொரிந்து பருப்புகள் சிவந்து வந்ததும் நாம் வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள் பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  5. பின் அனைத்தும் பொருட்களும் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூளையும் சேர்த்து மசாலா பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  6. அதன்பின் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் மூளையே சேர்த்து கரண்டியால் மூளைய உடைத்துவிட்டு நன்றாக கிளறி விடுங்கள் பின் இதனுடன் 4 டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள் தண்ணீர் நன்றாக கொதித்து மூளை வெந்ததும்.
  7. பின் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள் முட்டை நன்றாக வதங்கி தனித்தனியாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  8. அதன் பின்பு மிளகுத்தூள் தூவி சிறிது கொத்தமல்லியையும் தூவி வதக்கி கொள்ளுங்கள். இப்படி ஒரு நிமிடம் வதக்கி கடாயை கீழே இறக்கி வைத்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான மூளை முட்டை பொரியல் தயார் ஆகிவிட்டது.