தித்திக்கு சுவையில் பனங்கிழங்கு பாயாசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!!

Summary: பனங்கிழங்கினை கொண்டு எண்ணற்ற உணவுப் பண்டங்களை நமது முன்னோர்கள் தயாரித்து வந்தார். அந்த வரிசையில் இன்று நாம் பனங் கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பனங்கிழங்கினை பயன்படுத்துவதின் மூலம் நீரிழிவு வியாதியில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த பனங்கிழங்கு உணவுப் பொருட்களை கொடுத்து வருவதால் எண்ணற்ற பயன்கள் ஏற்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. பனங்கிழங்கின் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

Ingredients:

  • 6 பனங்கிழங்கு
  • 300 கிராம் வெல்லம்
  • 2 டீஸ்பூன் பச்சரிசி
  • 1 கப் தேங்காய்
  • 200 மிலி பால்
  • 10 முந்திரி
  • 2 ஏலக்காய்
  • 3 டீஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் பனங்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  3. பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. அதன் பின்னர் ஊறவைத்த பச்சரிசி தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. பின்னர் வெல்லத்தை உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடைத்து வைத்த வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.
  6. பின்னர் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி தேங்காய் பால் அரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அதன் பின் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும். பசைபோல் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  7. அதன் பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பனங்கிழங்கு சாறை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அதன்பின் வெல்லப்பாகை ஊற்றி கிளற வேண்டும்.
  8. பின்பு வேறெரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  9. பின்னர் அதை பாயாச கலவையில் சேர்த்து கிளற வேண்டும். ஏலக்காய் இரண்டையும் தட்டி போட வேண்டும். முந்திரி போட்டபின் இரண்டு நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
  10. சுவையான அட்டகாசமான ருசியில் பனங்கிழங்கு பாயாசம் ரெடி.