பஞ்சு போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!

Summary: டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி எடுத்து விடலாம். இங்கு காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது என்று பாப்போம்.வாழை இலையில் வேகவைக்கப்பட்ட இட்லி மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உண்மையான மற்றும் பாரம்பரிய இட்லி செய்முறை. இது தமிழ் சமையலில் இருந்து வந்தது ஆனால் குறிப்பாக தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்திற்கு சொந்தமானது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 cup புழுங்கல் அரிசி
  • 4 cup பச்சரிசி
  • 3 cup உளுத்தம் பருப்பு
  • 4 tbsp நல்எண்ணெய்
  • ¼ சுக்கு தூள்
  • 2 tbsp உளுத்தம் பருப்பு
  • ½ tsp ஆப்ப சோடா
  • 1 tbsp கடுகு
  • 3 tbsp கடலைப் பருப்பு
  • 1 tbsp மிளகு
  • 1 tsp சீரகம்
  • 4 tbsp துருவியது தேங்காய்
  • 15 gm கறிவேப்பிலை
  • 1 tbsp பெருங்காயம்
  • 1 இஞ்சி
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. 
  2. பின் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்ற வேண்டும்.
  3. பிறகு அவற்றை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துப் புளிக்க வைக்கவும். 
  4. பிறகு புளித்த மாவில் சுக்கு தூள், ஆப்ப சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். 
  5. பின் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்ற வேண்டும்.
  6. அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பொன்னிறமானதும், அதில் மிளகு, சீரகத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் சேர்க்கவும். 
  7. பிறகு இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கி மாவுடன் சேர்க்கவும். பிறகு அனைததையும் நன்றாகக் கலந்து, மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்தெடுக்கவும்.சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்