ருசியான நார்த்தங்காய் ரசம் இப்படி செய்து பாருங்க! சாதத்துடன் சாப்பிட்டால் இதன் ருசியே தனி ருசி!!

Summary: தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். உண்மையான செய்முறையில் ரசம் பொடி பயன்படுத்தப்படுகிறது ஆனால் கூடுதல் சுவைக்காக புதிதாக அரைத்த மசாலாவைப் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். நார்த்தங்காய் ரசம் புளிப்பு, கசப்பு மற்றும் காரமான சுவை கொண்டது மற்றும் முற்றிலும் தவிர்க்க முடியாத மிகவும் சுவையான ரசம்.

Ingredients:

  • 1 நார்த்தங்காய்
  • 1/2 கப் துவரம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை கல்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் துவரம் பருப்பை குக்கரில் மஞ்சள் பொடி பெருங்காயத்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளியை பொடியாக நறுக்கிப்போட்டு வேக வைக்கவும்.
  3. பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி போடவும். இஞ்சியைத் துருவி போடவும் கல்லு உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.
  4. இப்பொழுது வேக வைத்த பருப்பை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  5. சிறிது ஆறியவுடன் நார்த்தங்காய் ஜூஸ் எடுத்து ரசத்தில் ஊற்றவும்.
  6. ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  7. இது பசியின்மை, வாய்க்கசப்பு இதற்கு நன்றாக இருக்கும்.