ருசியான ஹரியாலி சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Summary: சிக்கன் 65 என்பது இந்தியா முழுவதும் பிரபலமான சிக்கன் உணவாகும். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ​​சிக்கன் 65 செய்வது மிகவும் எளிது. சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் 65 செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். சிக்கன் 65 ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான உணவுவகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய நேரத்தில் பிரியாணி, நெய் சோறு, ஆகியவற்றுடன் பரிமாறலாம். இது எலும்பில்லாத சிக்கன், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மற்றும் இதர இந்திய மசாலா வகைகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 5 பச்சை மிளகாய்
  • 1/4 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் கரம்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 2 டீஸ்பூன் கார்ன்ப்ளவர் மாவு
  • 2 டீஸ்பூன் பச்சரிசி மாவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. சிக்கனை சுத்தம் செய்து அதில் தனியா, மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸி ஜாரில் புதினா கொத்தமல்லி, பச்சை மிளகாய், தயிர் சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சிக்கனுடன் சேர்த்து கலந்து விடவும்.
  3. இறுதியாக அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்து கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. ஊறிய சிக்கனை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  5. இப்போது சூடான சுவையான ஹரியாலி சிக்கன் 65 தயார்.