ருசியான தயிர் கத்தரிக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Summary: நம்முடைய ஊர்களில் எளிதில் கிடைக்கும் காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று. இவற்றில் சுவையான சாம்பார், புளிக்குழம்பு என செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும், கத்தரிக்காயோடு தயிர் சேர்த்து செய்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். பொதுவா கத்தரிக்காய் என்றாலே சில பேருக்கு பிடிக்காது. ஆனா நாம் இதுமாறி கத்தரிக்காய் செய்து குடுத்தால் எல்லாருமே சாப்பிடுவாங்க. இந்த தயிர் கத்தரிக்காய் கிரேவி ஈசியா செஞ்சுடலாம். அதோட சுவையாவும் இருக்கும்.

Ingredients:

  • 1 கத்தரிக்காய்
  • 2 பெரிய
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. பெரிய கத்தரிக்காய் ஓன்றை எடுத்து கழுவி, துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து வைக்கவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து, பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. கொஞ்சம் வதக்கியதும் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். உப்பு சேர்ப்பதால் விரைவில் தக்காளி வதங்கிவிடும்.
  6. பின்னர் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துள்ள கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின் தயிர் சேர்த்து நன்கு வதக்கி ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.
  7. குறிப்பிட நேரம் கழித்து எடுத்தால் கத்தரிக்காய் நன்கு வெந்திருக்கும். அதில் கரம் மசாலா, நறுக்கிய மல்லி இலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து இறக்கினால் தயிர் கத்தரிக்காய் கிரேவி தயார்.
  8. பின்னர் எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவினால் சுவையான கீரிமி கிரேவியான, தயிர் கத்தரிக்காய் கிரேவி சுவைக்கத் தயார்.
  9. இது சாதத்துடன் கலந்து சாப்பிட,தயிர் சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.