இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான கருவேப்பிலை இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Summary: இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைகள் பலருக்கு இன்றும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பிடித்ததாக இருக்கும். அதனால் இன்று இட்லி பொடி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருவேப்பிலை இட்லி பொடி செய்வது பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் கருவேப்பிலை
  • ½ கப் உளுந்த பருப்பு
  • ¼ கப் கடலை பருப்பு
  • 7 வர மிளகாய்
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • 1 tbsp எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கருவேப்பிலை இலைகளை சேர்த்து கருவேப்பிலை இலையில் உள்ள ஈரப்பதம் மொறு மொறுவென வரும் வறுத்து எடுத்து ஒரு தட்டில் சேர்த்து குளிர வைத்து கொள்ளவும்.
  2. பின் அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தீயை மிதமாக வைத்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  3. பின் இதனுடன் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கடாயை கீழே இறக்கி நன்கு குளிர வைத்து கொள்ளவும். பின் அனைத்துப் பொருட்களும் நன்கு குளிர்ந்ததும், முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொண்டு.
  4. அதில் முதலில் வறுத்த கருவேப்பிலையை சேர்த்து பாதியளவு அரைத்து கொள்ளவும். பின் இதனுடன் வறுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான கருவேப்பிலை இட்லி பொடி தயார்.