மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான முள்ளங்கி வெஜிடபிள் பிங்கர்ஸ் இப்படி செய்து பாருங்க!!

Summary: பிங்கர்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பவை. மேலும் உணவு பிரியர்களுக்கும் இவை மிகவும் பிடித்தமான ஒரு உணவு. என்ன தான் பிங்கர்ஸ்ஸில், சிக்கன் பிங்கர்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தாலும் வெஜிடபிள் பிங்கர்ஸ்க்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் பிங்கர்ஸ் எவ்வாரோ அது போன்றே சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிங்கர்ஸ். ஏனென்றால் வெஜிடபிள் பிங்கர்ஸ்க்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான்.

Ingredients:

  • 2 உருளைக்கிழங்கு
  • 2 துருவிய கேரட்
  • 2 பெரிய
  • கொத்தமல்லி இலை
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 பிரெட்
  • 3 துருவிய முள்ளங்கி
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 3 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் கராப்தலை பவுடர்
  • 4 டீஸ்பூன் பிரெட் தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு அகல பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, உப்பு, பிரெட்டை தண்ணீரில் ஒரு நிமிடத்திற்கு ஊற வைத்து சேர்க்கவும்.
  2. பின்னர் முள்ளங்கியை துருவி அதை தண்ணீர் வடித்து முள்ளங்கியை சேர்த்து மற்றும் இஞ்சி பச்சை மிளகாய் இடித்து சேர்த்து நன்கு பிசையவும்.
  3. பின்னர் அந்த கலவையை உருண்டை வடிவத்திலோ அல்லது தட்டை வடிவத்திலோ செய்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடுத்தது மிக்ஸி ஜாரில் கடலை பருப்பு, வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு இதில் மஞ்சத்தூள், மிளகுத்தூள், உப்பு, கராப்தலை பொடி, பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பிறகு வெஜிடபிள் பிங்கர்ஸ்ஸை செய்துவைத்த பவுடரில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும்.
  7. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் செய்த வெஜிடபிள் பிங்கர்ஸ் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். முள்ளங்கி வெஜிடபிள் பிங்கர்ஸ் தயார்.