தித்திக்கும் சுவையில் மைசூர் பாகு இனி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Summary: மைசூர் பாகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்வீட் வகைகளில் இந்த மைசூர் பாகும் ஒன்றுதான். பண்டிகை நாட்களில் தான் இது போன்று ஸ்வீட் சாப்பிடுவோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே மைசூர் பாகு எப்படி செய்வதென்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை வில்லன்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் கடலை மாவு
  • 2¾ கப் சர்க்கரை
  • 2½ கப் நெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலில் நெய் ஊற்றி சுடவைத்து கடலை மாவை சலித்து அத்துடன் அரைக்கப் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. சர்க்கரையை ஒரு வாணலில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து ஒரு கம்பி பதம் வர வேண்டும். { இரண்டு விரலுக்கிடையில் பாகை தொட்டு பார்த்தால் கம்பி பொல் நீளமாக வரவேண்டும்.}
  3. பாகு கம்பி பதம் வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவை கொட்டி கிளறவும்.
  4. மற்றொரு அடுப்பில் நெய்யை வைத்து சிம்மில் வைக்கவும். நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலை மாவு, பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாக கரண்டியால் விட்டு கொண்டே கை விடாமல் கிளறி விட வேண்டும்.
  5. கலவை கெட்டியாகி மேல பூத்து வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி உடனே துண்டு போட வேண்டும்.
  6. சூடு ஆறியதும் வில்லைகளை எடுத்து வைக்கவும். இறக்கியவுடன் துண்டுகள் போடாமல் இருந்தால் மைசூர் பாகு இறுகி துண்டாக வராது
  7. மைசூர் பாகு தயாரானதும் தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும்.