காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Summary: தமிழர்களின் தினசரி காலை உணவில் இட்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சாப்பிட்டவுடன் எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு இது என்றாலும் தினமும் இட்லி என்றால் சாப்பிடுபவர்களுக்கு அது ஒருவித அலுப்பைத் தந்துவிடும். அந்தப் பிரச்னை இனி உங்களுக்கு வராது. இதோ… பனீர் இட்லி, ராமசேரி இட்லி, கடலைப்பருப்பு இட்லி, கர்நாடகா இட்லி என்று விதவிதமான இட்லி ரெசிப்பிகள் உள்ளன. பிறகென்ன தினம் ஒருவகை இட்லியைச் செய்து கொடுத்து குடும்பத்தை அசத்தலாம்தானே! வரகரிசி மிகவும் ஆரோக்கியம் மிகுந்த சிறுதானிய வகை. சிறு தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யலாம்.

Ingredients:

  • 50 கிராம் சோளம்
  • 50 கிராம் தினை
  • 50 கிராம் கேழ்வரகு
  • 50 கிராம் கம்பு
  • 50 கிராம் வரகு
  • 50 கிராம் சாமை
  • 50 கிராம் குதிரை வாலி
  • 150 கிராம் உளுந்து
  • உப்பு

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் சிறுதானியங்களை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. உளுந்தை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் சிறுதானியங்களை தனியாக எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. இரண்டையும் உப்பு சேர்த்து பிசைந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. இப்பொழுது இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.