மதிய உணவுக்கு ஏற்ற ருசியான காய்கறி இளங்கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: ரொம்ப ரொம்ப ஈசியா காய்கறி இளங்கூட்டு  ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. காய்கள்கறி என்றாலே அவற்றை பொரியல் செய்தால் பலரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. எனவே அவற்றை பொடியாக அறிந்து அந்த காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்து கூட்டு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க  இளங்கூட்டு ரெசிபியை பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் அவரை, கத்திரி, பூசணி, பரங்கி, காராமணி, கொத்தவரை (பொடியாக நறுக்கியது)
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் பால்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து (பாத்திரத்தில்) மலர வேக வையுங்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறுங்கள்.
  2. நறுக்கியகாய்கறிக் கலவையுடன் சிறிது உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள்.
  3. 2 நிமிடம் கழித்து விசிலை எடுத்து பிரஷரை வெளியேற்றிவிட்டு மூடியைத் திறந்து, வெந்த காய்களுடன் பருப்பை சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள் 5 நிமிடம் கொதித்ததும், சீரகம், கிள்ளிய கறிவேப்பிலை. பால் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
  4. விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, சத்தான இளங்கூட்டு இது.