டீ, காபியுடன் சாப்பிட சுவையான தினை பிஸ்கட் இப்படி செய்து பாருங்கள்!!

Summary: பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த தினை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த தினை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள். இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள்.

Ingredients:

  • 200 கிராம் தினை மாவு
  • 100 கிராம் கோதுமை
  • 150 கிராம் சர்க்கரை
  • 50 கிராம் வெண்ணெய்
  • 40 மிலி சூடான
  • 1/2 கப் பால்
  • 1 டீஸ்பூன் பேக்கிங்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங்
  • 1 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 30 மிலி ரோஸ் சிரப்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 ஓவன்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. தினை மாவுடன் கோதுமை மாவு கார்ன் பிளார், பால் பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்.
  2. பின் சர்க்கரையை அளந்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்.
  3. பின் இதை மூன்று முறை ஜலித்து கொள்ளவும். இதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் வென்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் சூடான எண்ணெய் ஊற்றி நன்றாக அழுத்தி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  5. அதில் சிறிது மாவில் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் ஹார்ட் வடிவ பிஸ்கெட் கட்டரை பயன்படுத்தி ஹார்ட் வடிவில் ஷேப் செய்து கொள்ளவும்.
  6. பின் இதை பேக்கிங் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கவர் சுற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.
  7. பின் அதனை வெளியில் எடுத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.
  8. சுவையான ஆரோக்கியமான இரண்டு விதமான தினை பிஸ்கெட் ரெடி.