பெருமாள் கோவில் ஸ்டைல் சுவையான புளியோதரை செய்வது எப்படி ?

Summary: என்னதான் மசாலா பொருட்களை வைத்து வீட்டில் நாம் புளி சாதம் தயார் செய்து பரிமாறினாலும் கோயில்களில் வைக்கப்படும் புளி சாதம் மட்டும் ஏன் இவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கிறது என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா ? அதுவும் பெருமாள் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் புளி சாதத்தை சுவவைத்தால் போதும் தேவாமிர்ததிற்கு இணையான சுவையில் இருக்கும். ஏனென்றால் அவர்கள் கடைகளில் விற்கும் ரெடிமேட் மசாலாக்களை பயன்படுத்தாமல் புளி சாதத்திற்கு மசாலா பொருட்கள் அவர்களை தயாரித்து அதை பயன்படுத்துவார்கள். இன்று எப்படி பெருமாள் கோவில் ஸ்டைலில் புளி சாதம் செய்வது தேவையான பொருட்கள் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 tbsp மிளகு
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp கருப்பு எள்
  • ¼ tbsp வெந்தயம்
  • 4 tbsp எண்ணெய்
  • 3 வர மிளகாய்
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 கைப்பிடி வேர்கடலை
  • 1 கொத்து கருவேப்பிலை
  • புளி கரைசல்
  • ¼ tbsp மஞ்சள் துள்
  • 1 tbsp குழம்பு மசாலா
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் சில பொருட்களை எண்ணெய் இல்லாமல் ஓன்றன் பின் ஒன்றாக வறுத்து அதன் பின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும்.
  2. அதற்கு முதலில் மிளகு, இரண்டாவது கடுகு, மூன்றாவது கருப்பு எள், நான்காவது வெந்தயம் எனது நான்கு பொருட்களையும் தனித்தனியாக கடாயில் போட்டு வறுத்து பொடி அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அதன்பின் கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுத்தெடுக்கவும்.
  4. அதன்பின் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின்பு எலுமிச்சை அளவு புளியை நீரில் கரைத்து புளி தண்ணீரை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அடுத்து மஞ்சள் தூள் குழம்புமசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  5. பின் நன்றாக கொதிக்க விடுங்கள் கடைசியாக நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து ஒரு மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
  6. அதன்பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு பெருங்காயம் போட்டு தாளித்து இதனோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  7. புளி சாதத்திற்கு தேவையான புளி மசாலா தயாராகிவிட்டது. அடுத்து புளி சாத பக்குவத்திற்கு தேவையான அளவு சாதத்தை சேர்த்து கலந்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் பெருமாள் கோவில் ஸ்டைல் புளி சாதம் இனிதே தயாராகிவிட்டது.