மிகவும் ருசியான சைனீஸ் பெல் இப்படி செய்து ப்ருங்கள்! பிரபலமான சைனீஸ் உணவு!!

Summary: சைனாவில் மிகவும் பிரபலமான சைனீஸ் பெல் உணவு அருமையான சுவையுடன் அதிக நறுமணத்துடனும் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் போன்று தோற்றமளிக்க கூடிய ஒரு உணவு வகையாகும். சீன பெல்லின் இந்த எளிதான செய்முறை அதிக நேரம் எடுக்காது, மேலும் இது உங்கள் விருந்துக்கு சரியான தொடக்கமாக இருக்கும். ‌ சைனீஸ் நூடுல்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த சைனீஸ் நூடுல்ஸை பேச்சுலர்களும் செய்யலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்தியாவில் அதிக அளவு பிரபலம் இல்லாத இந்த உணவு வகை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரவி வருகிறது.

Ingredients:

  • 2 பாக்கெட் நூடுல்ஸ்
  • 1 கப் முட்டைக்கோஸ்
  • 1 கப் காரட்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 1/2 கப் வெங்காயம்
  • 2 டீஸ்பூன் தக்காளி
  • 2 டீஸ்பூன் செஸ்வான் சாஸ்
  • 1 டீஸ்பூன் சோயா
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • எண்ணெய்
  • 1 சிட்டிகை உப்பு
  • வெங்காயத்தாள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நூடுல்சை உதிரியாக வேக விட்டு ஆற விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. முட்டைகோஸ், காரட், குடைமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய காய்களை நீளமாக நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேக வைத்த நூடுல்ஸ் எடுத்து போட்டு நன்கு சிவந்து முறுக்கு போல் மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
  4. பார்வைக்கு ஓமப்பொடி முறுக்கு போல் தோன்றும்.எல்லா வற்றையும் இதே போல் வறுத்து எடுக்கவும்.
  5. நூடுல்ஸ் முறுக்கு ஆறின பிறகு கை வைத்து ஓமப்பொடி போல் சிறுதாக உடைத்து விட்டவும்.
  6. அடுப்பில் வானலி வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், முட்டைகோஸ், காரட் சேர்த்து வதக்கவும்.
  7. குடைமிளகாய் சேர்த்து வதக்கி அரை வேர்க்காடில் வேக விட்டு பிறகு செஸ்வன் சாஸ், டொமட்டோ சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கிளறி விட்டு அடுப்பை ஆப் செய்து விடவும்.
  8. கீழே இறக்கி வைத்து அத்துடன் நூடுல்ஸ் முறுக்கு சேர்த்து நன்கு கலந்து, மேல் பொடியாக நறுக்கின வெங்காயதாள் தூவி அலங்கரித்தால் சுவையான சைனீஸ் பெல் தயார்.
  9. நன்கு மொறுமொறுப்பாக, அருமையான சுவை மற்றும் நிறத்துடன் இருக்கும் இந்த சைனீஸ் பெல்.