மதிய உணவுக்கு ருசியான பீர்க்கங்காய் இறால் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Summary: சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான பீர்க்கங்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க பீர்க்கங்காய் பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது.எப்படி இந்த பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 பீர்க்கங்காய்
  • 30 காய்ந்த இறால்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1½ டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 கறிவேப்பிலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. பீர்க்கங்காய் தோல் சீவி ஒரு அங்குலம் வட்டமாக நறுக்கி அதை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. காய்ந்த இறாலை மண் போக தண்ணீரில் அலசி வைக்கவும்.
  4. அடுத்து வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த இறால் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  6. அதில் பீர்க்கங்காய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேகவைக்கவும்.
  7. வெங்காயம், தக்காளி, பெருகங்கை வெந்ததும் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கி விட்டு இறாலை சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
  8. பிறகு இரண்டு கையளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.
  9. தண்ணீர் வற்றியதும் ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.