தித்திக்கும் சுவையில் கவுனி அரிசி பாயசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!

Summary: கருப்பு கவுனி அரிசி பாயசம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உலவருக்கும் கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அவ்வளவு சுவையாக இருக்கும்.எப்படி இந்த பாயசத்தை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி
  • 1 கப் வெல்லம்
  • ஏலக்காய் பொடி
  • 1 சிட்டிகை உப்பு
  • ½ கப் தேங்காய் துருவல்
  • 4 ஸ்பூன் நெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கவுனி அரிசியை இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதனை குக்கரில் போட்டு அரிசி ஊறவைத்த தண்ணீர் 4 கப் ஊற்றி 4 விசில் விட்டு நன்கு வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  3. வெந்ததும் அதனைநன்கு மசித்துக்கொள்ளவும்.
  4. பிறகு அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து நுணுகிய வெல்லம் சேர்த்து கிண்டவும்.
  5. வெல்லம் கரைந்ததும் ஏலக்காய் பொடி, மற்றும் உப்பு, தேங்காய் துருவல், மற்றும் தேவையான அளவு நெய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  6. இப்பொது சுவையான கவுனி அரிசி பாயசம் தயார்.