ருசியான கீரை போண்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: ஈவினிங் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு கீரை போண்டா இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் முருங்கை கீரை
  • 1 கப் கடலை மாவு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • உப்பு
  • 1 பின்ச் பேக்கிங் சோடா
  • 1 பின்ச் பெருங்காயப்பொடி
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்
  • பெரிய பவுள்

Steps:

  1. முதலில் முருங்கை கீரையை உருவி கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பௌலில் கடலை மாவு, கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
  3. அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை தேவையான வடிவில் உருண்டை பிடித்து எண்ணெயில் போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொழுது சுவையான கீரை போண்டா தயார்.