ருசியான காய்கறி ரசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் வைத்து சாப்பிட ருசியாக இருக்கும்!

Summary: சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் காய்கறி ரசம் இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.எப்படி இந்த ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்துப்பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கேரட்
  • 2 பீன்ஸ்
  • ½ கப் துவரம் பருப்பு
  • ரசப்பொடி
  • உப்பு
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • புளி
  • கடுகு, எண்ணெய்
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் துவரம் பருப்பை ½ மணி முதல் 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  2. புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்துக்கொள்ளவும்.
  3. பருப்புடன் அணைத்து காய்கறிகளையும் குக்கரில் போட்டு நன்கு வேக வைத்துக்கொள்ளவும். பிறகு ஆறியதும் மிக்சியில் சேர்த்து 2 சுற்று விட்டு கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுதை ஒரு கொதி விடவும்.
  5. நன்கு கொதிக்கும் போது புளியை கரைத்து ஊற்றி பெருங்காயப்பொடி, ரசப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. பிறகு இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.