ருசியான மைசூர் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி!

Summary: இந்த ருசியான மசாலா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மைசூர் மசாலா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 cup தோசை மாவு
  • 3 tbsp நெய்
  • 1 tbsp இட்லி பொடி
  • 1 உருளை கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tsp சாம்பார் பொடி
  • ½ tsp மஞ்சள்தூள்
  • 20 gm கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு
  • ½ tsp கடுகு, சீரகம்
  • 1 tsp உளுந்து
  • 1 tsp கடலைபருப்பு
  • 3 சிகப்பு மிளகாய்
  • 20 கறிவேப்பிலை
  • 1 பல்லாரி வெங்காயம்
  • ½ tsp மிளகு,சீரகம், உளுந்து, கடலைபருப்பு
  • 4 பூண்டு
  • ¼ tsp கடுகு
  • 2 tbsp ந.எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.
  3. நீட்டமாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தினை சேர்க்கவும். அதில் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறுது வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் மசித்த உருளை சேர்த்து கிளரி 5-7நிமிடம் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து விட்டு மேல் சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக குறைந்த தனலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  6. நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  7. தோசை தவாவில் மெலிசாக, பரவலாக தோசை ஊற்றவும். மேலே சுற்றி வரை நெய்/எண்ணெய் சிறுது ஊற்றவும்.
  8. 2நிமிடங்கள் கழித்து அதன் மேல் பரவலாக தக்காளி சட்னி தேய்க்கவும் அதன் மீது இட்லி பொடி சிறுது தூவி அதன் மேல் உருளை ஸ்டப்பிங் பரவலாக வைத்து மேலே சிறுது எண்ணெய் ஊற்றி முக்கோண வடிவில் மூடிவிடவும்..