ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் கச்சோரி சாட் இப்படி செய்து பாருங்க!

Summary: இந்திய உணவு வகைகளில் பல வகையான கச்சோரி சமையல் வகைகள் உள்ளன மற்றும் மூங் தால் கச்சோரி பிரபலமான ஒன்றாகும். டெல்லி வருபவர்கள் தவறாமல் விரும்பி ருசிக்கும் தெருவோர உணவுகளில் ஒன்றாக கச்சோரி உள்ளது. எல்லா தரப்பு வயதினரையும் கவரும் இந்த ஸ்நாக்ஸ் வகை உணவை அதே சுவை மாறாமல் வீட்டிலேயே செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 2 கப் மதா
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 3/4 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1/2 கப் வேகவைத்த பச்சை பட்டாணி
  • 1/2 கப் வேகவைத்த பச்சை பயிர்
  • 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • 2 டேபிள் ஸ்பூன் மிக்சர்
  • 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • சாட் மசாலா

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  2. பிறகு இதில் உப்பு, சூடான எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இது மிருதுவாக இருக்க வேண்டும்.
  3. பிறகு இதை இரு பங்காக பிரித்து ஒரு பங்கை சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
  4. பிறகு சதுரமாக வெட்டி சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு சின்ன கப்பில் எண்ணை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  5. எண்ணைய் தேய்த்த பாத்திரத்தின் மேல் ஒவ்வொரு துண்டு வைக்கும் போதும் அடுத்த துண்டு வைக்கும் போது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  6. ஒரு துண்டு மேல் மற்றொன்று கீழ் என பின்னிக் கூடை பின்னுவது போல் பின்னிக்‌ கொள்ளவும். இதேபோல் மற்ற அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்.
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்திருக்கும் கூடை கப்பை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
  8. தயாரித்து வைத்திருக்கும் கூடையில் இப்போது சிறிது வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சைப் பயிறு சேர்க்கவும்.
  9. பிறகு சிறிது தயிர், புளி கரைசல், மிக்ஸ்சர் என வைக்கவும்.
  10. இதேபோல் மற்றொரு அடுக்காக அதன்மேல் உருளைக்கிழங்கு, பட்டாணி,பச்சை பயிர், தயிர், புளிக் கரைசல், நறுக்கிய வெங்காயம் என சேர்க்கவும்.
  11. இறுதியாக இதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா தூவி பரிமாறவும்.