ருசியான பலாப்பழ குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸ்!

Summary: முக்கனிகளுள் ஒன்று பலா என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. இந்த பலா பழத்தின் சுவையை வார்த்தைகள் சேர்த்து வரிகள் கோர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும்.

Ingredients:

  • 1 1/2 கப் மைதா
  • 1/2 கப் பொடித்த சர்க்கரை
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப் பலாப்பழம்
  • 10 பாதாம்
  • 1 டீஸ்பூன் பேக்கிங்
  • 1/2 சிட்டிகை உப்பு
  • 2 டீஸ்பூன் ஜாம்
  • 1 டீஸ்பூன் தேன்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 வுபவுள்
  • 1 ஓவன்

Steps:

  1. முதலில் பலாப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய பலாப்பழத்தை சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு இதை ஆற வைக்கவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. பிறகு பொடியாக நறுக்கிய பாதாம் பலாப்பழத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. அடுத்தது மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பேக்கிங் தட்டில் அடுக்கி வைக்கவும். 10 நிமிடம் முன் கூட்டியே oven'னை 180°C அளவிற்கு சூடாக்கவும். செய்த குக்கீஸ்'ஸை 45நிமிடம் 160°C அளவில் பேக் செய்யவும்.
  7. அடுத்தது 45 நிமிடம் கழித்து குக்கீஸ்'ஸை ஆறவிடவும். பிறகு ஒரு கிண்ணத்தில் ஃப்ரூட் ஜாம், தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  8. குக்கீஸ் மேலே ஹார்ட் வடிவத்தில் செய்யவும். பலாப்பழம் குக்கீஸ் இப்போ தயார்.