ருசியான வெண்டைக்காய் மசாலா கூட்டு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற கூட்டு!

Summary: நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த வெண்டைக்காய் மசாலா கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த வெண்டைக்காய் மசாலா கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • 12 வெண்டைக்காய்
  • எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 தக்காளி அரைத்த பேஸ்ட்
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • 1 tsp சீரகம்
  • 5 முந்திரி பருப்பு
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து எண்ணெய் பசை நீங்கும் வரை வதக்கி பின் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  3. பின் அதில் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கி விடுங்கள். பின்பு இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை போன பின் அரைத்த தக்காளி பேஸ்ட் மற்றும் தேவையின அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் தக்காளி பேஸ்ட் நன்கு கொதித்து வந்ததும்.
  5. பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி நாம் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து மசாலா வாடை கோகும் வரை நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளவும்.
  6. பின்பு நாம் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி பின் 1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்து நாம் முதலில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கடாயை 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான வெண்டைக்காய் மசாலா கூட்டு தயார்.