வெயிலுக்கு இதமா குளு குளுனு தர்பூசணி கிரானிட்டா இப்படி செய்து பாருங்க!

Summary: கோடைகாலங்களில் எப்போதும் உடலில் நீர்சத்து இருப்பதும், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம். இவற்றை பெற நமக்கு பல இயற்கை உணவுகள் உதவுகின்றன. அதில் ஒன்று “தர்பூசணி” பழம். இந்த பழத்தை வைத்து வித்தியாசமான தர்பூசணி கிரானிட்டா செய்தால் அனைவரும் விரும்பி உண்பர். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 4 கப் தர்பூசணி
  • 1 கைப்பிடி புதினா இலை
  • 1/2 கப் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜஸ்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. நறுக்கிய தர்பூசணி, லெமன் ஜஸ், புதினா இலை, சர்க்கரை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். அரைத்ததை காற்று புகாத ஒரு டப்பாவில் ஊற்றி ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  2. பின் ஒரு மணி நேரம் கழித்து முள் கரண்டியால் நன்கு அதை கிளறி விட்டு மீண்டும் 1 மணி நேரம் வைக்க வேண்டும்.
  3. பிறகுஅதை எடுத்து மீண்டும் ஒரு முறை முள் கரண்டியால் கிளறவும். சிறிது மணி நேரம் உறைய வைத்த பிறகு பரிமாறும் போது மீண்டும் முள் கரண்டியால் உதிரியாக்கிய பின் பரிமாறவும். தர்பூசணிகிரானிட்டா தயார்.