ருசியான ஆப்பிள் பருப்பு ரசம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: ரசத்தில் பல வகை உண்டு மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் இப்படி ரசமே பல வகைகளில் உண்டு. நம் உணவுப் பழக்கத்தில் என்ன தான் வகை வகையாக சமையல் செய்து வைத்தாலும் கடைசியாக கொஞ்சம் மோர், ரசம் கண்டிப்பாக இருக்கும்.  ஆப்பிள் பருப்பு ரசம் வைத்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் வைத்து ஆப்பிள் வைத்து ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1 கப் ஆப்பிள்
  • அரை கப் துவரம்பருப்பு
  • 1/4 கப் தக்காளி  துண்டுகள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு
  • துவரம்பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 4 டீஸ்பூன் தனியா
  • 2 காய்ந்த மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு  வேகவிடவும்(குழைய வேகவிட வேண்டாம்).
  2. பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும்.
  3. எண்ணையில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்  பிலைகிள்ளிப் போடவும்.  சுவையானஆப்பிள் பருப்பு ரசம் தயார்!!!!!