சிதம்பரம் ருசியான கத்திரிக்காய் கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: சுவையான சைவ உணவுகள் இருக்கும் மத்தியில் சைவத்தில் ஒரு அசைவமான கத்திரிக்காய் இதனை வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது கத்திரிக்காய் என்றாலே மக்களுக்கு அலாதி பிரியம் உடையவர்கள் பலர் உள்ளனர் அப்படிப்பட்ட கத்திரிக்காயை வைத்து திரிக்க வைக்கும் செய்து சாப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் அதிலும் சிதம்பரத்தில் செய்யக்கூடிய கத்திரிக்காய் கொத்து இருக்கே அமோகம் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்திரிக்காய் கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 200 kg கத்தரிக்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு
  • 2 தக்காளி
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 1½ tbsp கடலைப்பருப்பு
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • ½ tsp வெந்தயம்
  • 5 மிளகாய் வற்றல்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • புளி
  • தேவையான அளவு உப்பு
  • 3 tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. சிதம்பரம் கத்திரிக்காய் கொத்து செய்ய முதலில் கடாயில் எண்ணெய் உற்றாமல் கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. கலவை ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை வறுத்து பின் சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம், ஆகியவற்றை நன்றாக வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்க்க வேண்டும்.
  4. பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். கலவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  5. ஊற வைத்த புளித்தண்ணீரை அதில் சேர்க்க வேண்டும். கலவிக்கு தேவையான உப்பை அதில் சேர்க்க வேண்டும்.
  6. பின் கலவையை நன்றாக தயிர் கட்டையை வைத்து கடைய வேண்டும். இப்பொழுது சுவையான கத்தரிக்காய் கொத்து தயார்.