மதிய உணவுக்கு ஏற்ற கிச்சடிக்கா மசாலா கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில்!

Summary: கிச்சடிக்கா மசாலா அதாவது இது அவரைக்காய் தொக்கு அல்லது கிரேவி போன்று இருக்கும், இதை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாதத்திற்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். அருமையான சுவையில் இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் அவரைக்காய்
  • புளி
  • 2 தக்காளி
  • 1 சில்லு தேங்காய்
  • 1 சுண்டு பட்டை
  • 2 பூண்டு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • ¼ டீஸ்பூன் மிளகு
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு,
  • 2 வெங்காயம்
  • 4 வரமிளகாய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. மிளகு, பட்டையை வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
  4. பின்னர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தனியா தூள், சேர்த்து கிளறவும்.
  5. இப்பொழுது அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி எண்ணெய் பிரிந்து வந்ததும் அவரைக்காய், உப்பு மற்றும் புளி கரைத்து ஊற்றி அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  6. கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.