தித்திக்கும் சுவையில் பால் அல்வா இப்படி வீட்டிலே செய்தே பாருங்க!

Summary: பாலில் ஸ்வீட் செய்தால் யாருக்கு தான் பிடிக்காது. அந்தவகையில் இன்று பால் அல்வா எப்படி வீட்டிலேயே செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் பால்
  • 1½ கப் சர்க்கரை
  • 6 முந்திரி
  • 2 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் முதலில் முந்திரியை உடைத்துக்கொள்ளவும், பிறகு ஏலக்காய் வாயில் தட்டு படாமல் இருக்க சர்க்கரையும், ஏலக்காயும் மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காயும் வரை கிண்டி விடவேண்டும்.
  3. அடுத்து ஒரு சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  4. பால் ஓரளவு திறந்ததும், சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சவும்.
  5. பாலானது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து நன்கு கிளறி விடும் பொழுது இன்னும் கெட்டியான பதத்திற்கு வரும்.
  6. இப்பொழுது சுவையான பால் அல்வா தயார்.
  7. குறிப்பு: பாலை அடிக்கடி அடுப்பில் இருந்து இறக்கி 2 நிமிடம் கழித்து கிளறி விட்டு மீண்டும் அடுப்பில் குறைந்த தீயில் வைத்தால் சீக்கிரம் திரண்ட பதத்திற்கு வரும்.