பூ போன்ற சுவையான ரவா இட்லி செய்வது எப்படி ?

Summary: அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை பெறுபவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று ரவா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் நம் காய்கறிகளும் சேர்த்து இட்லி செய்வதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். மேலும் சுவையான ரவா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் ரவா
  • 1 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 2  பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 1 துருவிய கேரட்
  • ½ பெரிய வெங்காயம்
  • ½ கப் தயிர்
  • ¾ கப் தண்ணீர்
  • உப்பு
  • 1 pinch பேக்கிங் சோடா

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் என்னை நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து ஓரு 20 வினாடிகள் வறுக்கவும்.
  2. அதன்பின்பு இதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது கருவேப்பிலை இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு கேரட்டை துருவி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும், பின் இதில் ஒரு பெரிய வெங்காயத்தில் பாதி அளவு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் இதோடு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நாம் வைத்திருக்கும் ரவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். ரவை நன்றாக வறுபட்டு மணம் வரும் சமயத்தில் ரவையை ஒரு வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
  5. பின் ரவை குளிரும் வரை காத்திருந்து குளிர்ந்த பின் கெட்டியான தயிர் ஊற்றி அதனுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், இந்த இந்த அளவு தண்ணீரை போதுமானதாக இருக்கும் மேலும் நீங்கள் எடுத்திருக்கும் ரவையின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  6. அதன் பிறகு ஒரு பத்து நிமிடங்கள் ரவையை நன்றாக ஊறவிடுங்கள். பின் ரவை நன்றாக ஊறியதும் தேவையான அளவு உப்பு ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சிறிது இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. மாவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும் மாவு தயார் ஆனவுடன் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றிக் கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில் ஆவி வந்ததும் எடுத்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான ரவா இட்லி தயாராகி விட்டது.